சம்மன்களுக்கு 50 விழுக்காடு கழிவு; 1.87 மில்லியன் ரிங்கிட் வசூல்

கோலாலம்பூர்:

போக்குவரத்து சம்மன்களுக்கு வழங்கப்பட்ட 50 விழுக்காடு கழிவால், கடந்த இரு நாட்களில் மட்டும் 1.87 மில்லியன் ரிங்கிட் வசூலிக்கப்பட்டுள்ளது என்று, புக்கிட் அமான் போக்குவரத்து புலனாய்வு அமலாக்க துறை இயக்குநர் முகமத் யுஸ்ரி ஹசான் பஸ்ரி கூறினார்.

சாலை குற்றங்களுக்கு வழங்கப்பட்ட சம்மன்களுக்கு 50 சதவீதம் கழிவு வழங்கப்பட்டது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு அதிகமானோர் தங்களின் அபராதத்தை செலுத்தினர்.

இதில் சுமார் 17,002 சம்மன்களுக்கான அபராதம் செலுத்தப்பட்டன என்றும், 270,850 ரிங்கிட் ரொக்கமாக சம்மன்கள் செலுத்தப்பட்டன என்றும் அவர் சொன்னார்.

50% summon discounts

மேலும் 882,340 சம்மன்கள் இணைய கட்டணம் மூலம் செலுத்தப்பட்டது. 725,430 ரிங்கிட் 50 சதவீத கழவு கூப்பன்கள் வாயிலாக செலுத்தப்பட்டது என்று அவர் கூறினார்.

இருப்பினும் 1990 முதல் இந்தாண்டு நவம்பர் 6 வரை நாடு முழுவதும் RM6.5 பில்லியன் மதிப்புள்ள 43.5 மில்லியன் போக்குவரத்து சம்மன்கள் இருவரை செலுத்தப்படவில்லை என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here