‘குருவி’கள் சிக்கினர்; ரூ.15 கோடி தங்கம் பறிமுதல்!

சென்னை: சிங்கப்பூரில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு, ரூ.15 கோடி மதிப்பிலான 20 கிலோ தங்கத்தைக் கடத்தி வந்த 8 பெண்கள் உட்பட 25 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணிகள் சிலரது நடவடிக்கை சந்தேகத்துக்கு இடமாக இருந்தது. அவர்களிடம் சுங்கத்துறையினர் சோதனை நடத்தியபோது தங்கம் அதிகப்படியாக இருப்பது தெரியவந்தது. மொத்தம் ரூ.15 கோடி மதிப்பிலான 20 கிலோ தங்கம் அவர்களிடம் இருந்தது. அவற்றை கொண்டு வந்த 8 பெண்கள் உட்பட பயணிகள் 25 பேரை அதிகாரிகள் மடக்கி பிடித்தனர்.

இவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் இருந்து தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை கடத்தும் வேலையில் ஈடுபட்டுள்ள ‘குருவி’கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்கள் யாருக்காக தங்கம் கடத்தி வந்தனர், அவர்களது பின்னணியில் இருக்கும் நெட்வொர்க் யார் என்பது பற்றி சுங்கத்துறையினர் விசாரிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here