விஜய்சேதுபதி மகன் பட வெளியீடு தள்ளிவைப்பு

விஜய் சேதுபதியின் மகன் சூர்யா முதன் முறையாக நாயகனாக நடிக்கும் படம் ‘பீனிக்ஸ் வீழான்’. இந்தப் படத்தை பிரபல சண்டை இயக்குநர் அனல் அரசு இயக்குகிறார்.

ஆக்ஷன் – ஸ்போர்ட்ஸ் டிராமாவாக உருவாகும் இப்படத்துக்கு சாம்.சி.எஸ் இசையமைக்கிறார். இந்தப் படம் வரும் நவம்பர் 14ம் தேதி (நாளை)திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது படத்தின் வெளியீட்டு தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான ‘பீனிக்ஸ் (வீழான்)’ நவம்பர் 14 அன்று வெளியிட திட்டமிடப்பட்டிருந்த நிலையில், எதிர்பாராத சூழ்நிலைகள் காரணமாக ஒத்தி வைக்கப்படுகிறது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஒரு குழுவாக நாங்கள் இன்னும் அதிக உற்சாகத்துடனும் எதிர்பார்ப்புடனும் சிறந்த சினிமா அனுபவத்தை வழங்க அயராது உழைத்து வருகிறோம். மாற்றியமைக்கப்பட்ட வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும். தங்களது தொடர்ச்சியான ஆதரவு, புரிதல் மற்றும் தங்களது பொறுமைக்கும் நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

‘பீனிக்ஸ் (வீழான்)’ முன்னெப்போதையும் விட வலுவாக உருவாகி வெளியாகும் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம், அது வெளியாகும்போது, அது ஒரு ஆரவாரமாக இருக்கும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here