2 சிஎஸ்கே வீரர்களை’…. ஏலத்தில் தட்டித்தூக்கப் போகும் ஆர்சிபி

ஐபிஎல் 18ஆவது சீசனுக்கான மெகா ஏலம், வரும் 24, 25 ஆகிய தேதிகளில் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஜித்தாக்கில் துவங்கி நடைபெறவுள்ளது.

மெகா ஏலத்திற்கு ரிஷப் பந்த், கே.எல்.ராகுல், இஷான் கிஷன், ஜாஸ் பட்லர் போன்ற முக்கிய வீரர்கள் ஏலத்திற்கு வருவதால், மெகா ஏலம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அணியானது, மொத்தமே 3 வீரர்களை மட்டுமே தக்கவைத்திருப்பதால், ஏலத்தில் ஆர்சிபி யார் யாரை வாங்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகமாகவே இருக்கிறது.

இந்நிலையில், மெகா ஏலத்தில் ஆர்சிபி அணியானது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் கழற்றிவிடப்பட்டுள்ள இரண்டு முக்கிய வீரர்களை வாங்க கடுமையாக போராடும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. அந்த இரண்டு வீரர்கள் டிவோன் கான்வே, முஸ்தபிசுர் ரஹ்மான் ஆகியோர் தான்.

ஆர்சிபி அணியில், சமீப காலமாகவே டாப் ஆர்டர் வரிசை படுமோசமாக சொதப்பி வருகிறது. கோலியை நம்பி மட்டுமே டாப் ஆர்டர் இருக்கிறது. இதனால், இந்த குறையை போக்க சிஎஸ்கேவுக்கு ஓபனராக இருந்த டிவோன் கான்வேவை வாங்க ஆர்சிபி முடிவு செய்துள்ளதாம்.

டிவோன் கான்வேவால் பவர் பிளேவில், பந்துகளை கேப் பார்த்து பவுண்டரிக்கு அடிக்க முடியும். மேலும், சின்னச்சாமி மைதானம் அளவில் சிறியது என்பதால், இங்கு டிவோன் கான்வேவால், பந்துகளை சரியான கேப்பில், சரியான டைமிங்கில் பவுண்டரி அடிக்க முடியும் என நம்புவதால், கான்வேவை வாங்க கோடிகளை கொட்ட முடிவு செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here