‘ஆர்சிபி புதுக் கேப்டன் இவர்தான்?’

ஐபிஎல் 18ஆவது சீசனுக்கான மெகா ஏலத்தில், கேப்டன் வீரரை வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, முக்கிய வீரர்கள் ஏலத்திற்கு வரும்போது கப்சிப் என இருந்தது, அந்த அணி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆர்சிபி அணி, கே.எல்.ராகுலை மட்டுமே டார்கெட் செய்து வைத்திருந்தது. இதனால், மெகா ஏலத்தில் கே.எல்.ராகுல் ஏலத்திற்கு வந்தபோது, அவருக்காக ஏலம் கேட்க ஆரம்பித்தார்கள். இந்நிலையில், 10 கோடி வந்த உடனே, கே.எல்.ராகுலை ஏலம் கேட்பதை அவர்கள் நிறுத்திக் கொண்டு, ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தனர். இறுதியில், 14 கோடி கொடுத்து, கே.எல்.ராகுலை டெல்லி கேபிடல்ஸ் அணி வாங்கியது.

ஆர்சிபி அணியிடம் அப்போது 74 கோடி ரூபாய் இருந்தது. இதனால், கே.எல்.ராகுலுக்காக அவர்கள் தாரளமாக 20 கோடி வரை ஏலம் கேட்டிருக்கலாம். ஆனால், கே.எல்.ராகுலுக்கை டார்கெட் செய்துவிட்டு, அவருக்காக வெறும் 10 கோடி வரை மட்டும் ஏலம் கேட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்போ, கே.எல்.ராகுலுக்காக 10 கோடி வரை மட்டுமே, முன்கூட்டியே பட்ஜெட் ஒதுக்கினார்களா? இது ஆர்சிபி செய்த, மாபெரும் வரலாற்று தவறு எனக் கூறி, ஆர்சிபி ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

முதல்நாள் ஏலத்தில், ஆர்சிபி அணியானது லியம் லிவிங்ஸ்டன் (8.75 கோடி), பில் சால்ட் (11.50 கோடி), ஜிதேஷ் சர்மா (11 கோடி), ஹேசில்வுட் (12.50 கோடி), ரஷிக் தார் (6 கோடி), சுயாஷ் சர்மா (2.60 கோடி) ஆகியோரை வாங்கியது. தற்போது, ஆர்சிபியிடம் 30.65 கோடி ரூபாய் மீதம் இருக்கிறது. இதனை வைத்து, இரண்டாவது நாள் ஏலத்தில், சாம் கரனை வாங்கி, கேப்டனாக நியமிக்க வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

26 வயதாகும் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் சாம் கரன், கடந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியை ஓரளவுக்கு சிறப்பாக வழிநடத்தினார். இவர் இளம் வீரராக இருப்பதாலும், சாம் கரனை வாங்கி, நீண்டகால கேப்டன்ஸி பிரச்சினையை தீர்க்க ஆர்சிபி முயற்சி செய்யும் எனக் கருதப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here