மொகதிசு,கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடு சோமாலியா. இந்நாட்டை சேர்ந்த பலர் பொருளாதார வாய்ப்புகளை தேடி ஐரோப்பாவுக்குள் நுழைய ஆபத்தான கடல்வழி பயணத்தை மேற்கொள்கின்றனர். இந்த பயணத்திபோது விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் அரங்கேறுகின்றன.
இந்நிலையில், சோமாலியாவை சேர்ந்த 70 பேர் 2 படகுகளில் இந்திய பெருங்கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு ஆபத்தான பயணத்தை மேற்கொண்டனர்.
அப்போது எதிர்பாராத விதமாக 2 படகுகளும் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 24 பேர் உயிரிழந்தனர். அதேவேளை, விபத்தில் சிக்கிய 46 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.