லக்னோ,உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் இருந்து படாவுன் மாவட்டத்தில் உள்ள டேடாகஞ்ச் நோக்கி கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. காரில் சகோதரர்கள் உட்பட 3 பேர் பயணித்தனர். கூகுள் மேப் உதவியுடன் கார் சென்றுகொண்டிருந்தது. அப்போது, அப்பகுதியில் வெள்ளத்தில் இடிந்து கேட்பாரற்று கிடந்த மேம்பாலத்தின் சென்ற கார், 50 அடியில் இருந்து கீழே ஓடும் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், காரில் பயணம் செய்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போலீஸார், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூகுள் மேப்பை நம்பி சென்றதால் விபத்து நடந்ததாக உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர். அத்துடன், பாலம் முழுமையடையாமல் கிடப்பதால், வரும் வாகனங்களை எச்சரிக்கும் வகையில் அப்பகுதியில் தடுப்புகள் ஏதும் இல்லை என துறை அதிகாரிகள் மீது குற்றம்சாட்டினர்.