கோலாலம்பூர்:
இன்று முதல் வெள்ளிக்கிழமை வரை கிளந்தான் மற்றும் திரெங்கானு மற்றும் குவாந்தான் மற்றும் ஜெரான்துட் ஆகிய மாவட்டங்களில் தொடர் மழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எச்சரிக்கை விடுத்துள்ளது.
பெர்லிஸ், கெடா (குபாங் பாசு, கோத்தா ஸ்டார், போகோக் சேனா, பாடாங் தெராப், பெண்டாங், சிக் மற்றும் பாலிங்); பேராக் (உலு பேராக்) மற்றும் பஹாங்கின் பல பகுதிகளான கேமரன் ஹைலேண்ட்ஸ், லிப்பிஸ், மாரான், பெக்கான் மற்றும் ரொம்பின் ஆகிய பகுதிகளில் இதே காலகட்டத்தில் கடுமையான தொடர் கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது என்று, MetMalaysia, இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தது.
இவை தவிர பகாங்கில் உள்ள ரவூப், பெந்தோங், தெமேர்லோ மற்றும் பெரா ஆகிய இடங்களும் இந்த வானிலையை பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம் பினாங்கு; கெடா (லங்காவி, யான், கோல மூடா, கூலிம் மற்றும் பண்டார் பாரு); மற்றும் பேராக் (கெரியான், லாரூட், மாடாங் மற்றும் செலமா, கோல கங்சார், கிந்தா மற்றும் கம்பர்) ஆகிய இடங்களும் இந்த தொடர்மழை பெய்யும் என்றும் தாது தெரிவித்தது.
மேலும் ஜோகூரில் உள்ள சிகாமாட், மெர்சிங் மற்றும் கோத்தா திங்கி, சபாவில் உள்ள டெலுபிட், பெலூரன், சண்டக்கான் மற்றும் கூடாட் ஆகிய இடங்களுக்கும் நவம்பர் 29 வரை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.