எப்படிப்பட்ட தீராத கஷ்டம், இக்கட்டான சூழல் ஆகியவற்றில் சிக்கி இருந்தாலும் சுந்தர காண்டம் படித்தாலும், கேட்டாலும் நல்ல பலன் கிடைக்கும். மன தைரியம் பிறக்கும், மங்கலங்கள் நிறையும். இப்படிப்பட்ட சுந்தரகாண்டத்தை தினமும் படித்து வந்தால் என்னென்ன நன்மைகள் நடக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ஸ்ரீராம பிரானின் மகா காவியமான ராமாயணத்தை படித்தாலும், காதுகளால் கேட்டாலும் மிகப் பெரிய புண்ணிய பலன் கிடைக்கும் என்பார்கள். ராமாயணத்தை முழுவதுமாக படிக்க முடியாதவர்கள் சுந்தர காண்டத்தை மட்டும் படித்தாலோ ராமாயணத்தை முழுவதுமாக படித்த பலன் கிடைத்து விடும் என பெரியவர்கள் சொல்லுவதுண்டு. கம்பராயணம் ஆறு காண்டங்களையும், 118 படலங்களையும், 10,589 பாடல்களையும் கொண்டது. இதில் ஐந்தாவது காண்டமாக வருவதே சுந்தரகாண்டமாகும்.
ராமாயணம் முழுவதுமே ராம அவதாரத்தை பற்றியது தான் என்றாலும் சுந்தர காண்டம் என்பது முழுக்க முழுக்க அனுமனை பற்றியதாகும். அவரின் பலம், வீரர், பக்தி போன்ற பல்வேறு குணங்கள், சிறப்புகள் போன்றவற்றை பற்றி சொல்லுவது சுந்தரகாண்டம் ஆகும். சுந்தரம் என்றால் அழகு என்று பொருள். இது அனுமனின் அழகிய பராகிரமத்தை குறிப்பது மட்டுமல்ல, இதை படித்தால் வாழ்க்கையே அழகாகும் என்பதையும் குறிக்கும். சுந்தர காண்டம் படிப்பதை பலரும் வழக்கமாக வைத்திருப்பார்கள். ஆனால் தினமும் சுந்தரகாண்டம் படித்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
1. ஒரே நாளில் சுந்தர காண்டம் முழுவதையும் படிப்பதன் பெருமையை ஆயிரம் நாக்குகள் படைத்த ஆதிசேஷனால் கூட விவரிக்க முடியாது என்று உமாசம்ஹிதையில் பரமேஸ்வரன் கூறியுள்ளார்.
2. ஒரு சமயம், பக்தர்கள் ஒருவர் வயிற்று வலியால் தான் மிகவும் கஷ்டப்படுவதாகவும், எந்த டாக்டராலும் அதை குணப்படுத்த இயலவில்லை என்றார். உடனே காஞ்சி பெரியவா, தினமும் சாப்பிடும் முன் சுந்தரகாண்டம் படி என்றார். அதன்படி அந்த நபர் பாராயணம் செய்து வர அவருக்கு வயிற்று வலி பறந்து போய் விட்டது.
3. சுந்தரகாண்டத்தில் உள்ள ஒவ்வொரு சர்க்கமும் மாபெரும் மந்திர சக்திகளுக்கு இணையானது என்று ஆன்மிக பெரியவர்கள் கூறியுள்ளனர்.
4. சுந்தரகாண்டத்தை நாம் எந்த அளவுக்கு படிக்கிறோமோ அந்த அளவுக்கு பகவானை நெருங்குகிறோம் என்று அர்த்தம்.
5. சுந்தரகாண்டத்தை ஆத்மார்த்தமாக படித்து வந்தால் வாழ்க்கையில் உள்ள துக்கங்கள் முடிவுக்கு வந்து விடும்.
6. சுந்தரகாண்டம் வாசித்தால் வாழ்வு வளம் பெறும். கஷ்டங்கள் தொலைந்து போகும்.
7. சுந்தர காண்டத்தை தொடர்ந்து வாசித்து வந்தால், வாசிக்க, வாசிக்க மன வலிமை உண்டாகும்.
8. சுந்தரகாண்டத்தை முறைப்படி வாசித்தால் காலதாமதமான திருமணம் விரைவில் கை கூடும். கவலைகள் மறந்து போய் விடும்.
9. சுந்தரகாண்டம் படித்து அனுமனை வழிபட்டு வந்தால் அறிவு, ஆற்றல், புகழ், குறிக்கோளை எட்டும் திறமை, துணிச்சல், ஆரோக்கியம், விழிப்புணர்வு, வாக்கு சாதூரியம் போன்றவற்றைப் பெறலாம்.
10. சுந்தரகாண்டத்தை மனம் உருகி படித்தால் பாவம் தீரும். முடியாத செயல்கள் முடிந்து விடும்.