மலேசிய பசியாறல் கலாச்சாரம் யுனெஸ்கோ அங்கிகாரம் பெற்றிருக்கிறது. நாசி லெமாக், ரொட்டி சானாய், தோசை ஆகியவை இந்த பெருமைக்கு மகுடம் சூட்டி இருக்கின்றன.
பல இனங்கள் வாழும்
மலேசியாவில் பசியாறல் கலாச்சாரம், டைனிங் அனுபவங்களுக்கு யுனெஸ்கோ அங்கிகாரம் கிடைக்கப்பெற்றிருப்பதாக சுற்றுலா, கலை, கலாச்சாரம் அமைச்சு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 டிசம்பர் 2 ஆம் தேதியில் இருந்து 7 ஆம் தேதி வரை பாராகுவேயில் நடைபெறும் தொட்டு உணர முடியாத கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாப்பது மீதான அரசாங்கங்களுக்கிடையிலான 19 ஆவது கூட்டத் தொடரில் இந்த அங்கிகாரம் அறிவிக்கப்பட்டது என்று அறிக்கையில் கூறப்பட்டது.