கோலாலம்பூர்:
நாட்டை உலுக்கிய வெள்ளம் சற்று சீரடைந்து வருகின்ற நிலையில், அங்குள்ள ஐந்து மாநிலங்களில் வெள்ளம் காரணமாக தமது வாழ்விடங்களைவிட்டு வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை மாலை 4.30 மணி நிலவரப்படி 5,533 ஆகக் குறைந்துள்ளது, இந்த எண்ணிக்கை இன்று காலை 8,950 ஆக இருந்தது.
பேரிடர் மேலாண்மை துறையின் தகவல் போர்ட்டலின் படி, மொத்தம் 1,633 குடும்பங்கள் தற்போது 31 தற்காலிக நிவாரண மையங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில் கிளந்தானிலுள்ள இரண்டு மாவட்டங்களில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் அங்குள்ள ஆறு நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர். அதேநேரம் கெடாவிலும் பல குடும்பங்கள் வாழ்விடத்திற்கு திரும்பியதைத் தொடர்ந்து, அங்குள்ள ஐந்து தற்காலிக நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 326 குடும்பங்களைச் சேர்ந்த 1,120 பேராக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.