அலோர் ஸ்டார்:
ஓடுபாதையில் ஏற்பட்ட மோசமான வெள்ளம் காரணமாக, கடந்த நவம்பர் 29 முதல் மூடப்பட்ட சுல்தான் அப்துல் ஹலிம் விமான நிலையம் இன்று மீண்டும் செயல்படத் தொடங்கியது.
வெள்ளநீர் முழுவதுமாக வடிந்ததைத் தொடர்ந்து, கோலாலம்பூர் மற்றும் சுபாங்கிற்குச் செல்லும் மற்றும் புறப்படும் ஏழு விமானங்கள் இப்போது திட்டமிட்டபடி இயக்கப்படுகின்றன என்பதை மேலாளர் இக்ரம் அலிஃப் மன்சூர் உறுதிப்படுத்தினார்.
“ஓடுபாதை மீண்டும் திறக்கப்படும் என்பதை அறிவிப்பதில் நமக்கு மகிழ்ச்சி. ஓடுபாதையின் தயார்நிலையை உறுதிசெய்வதில் ஊழியர்கள் மேற்கொண்ட அயரா முயற்சிகளுக்கு நன்றி தெரிவிக்கிறோம்,” என்று, ‘மலேசிய ஏர்போட்ஸ் ஹொல்டிங்ஸ் பெர்ஹாட்’ நிறுவனம், தனது ஃபேஸ்புக்கில் அறிவித்தது.