ஜெர்மனியில் ஐம்பொன் திருவள்ளுவர் சிலை

ஜெர்மனியில் 2 ஐம்பொன் சிலைகளைத் தமிழ் மரபு அறக்கட்டளை 2019ஆம் ஆண்டு நிறுவியது. அது ஐரோப்பாவில் வைக்கப்பட்ட முதல் திருவள்ளுவர் சிலை என்பதோடு உலகிலேயே முதன் முதலாக ஐம்பொன்னால் நிறுவப்பட்ட சிலைகள் என்ற சிறப்பை அவை பெற்றன.

இந்நிகழ்வு ஏற்படுத்திய ஊக்கத்தினால் ஜெர்மனியில் தமிழர்கள் அதிகம் வாழ்கின்ற டோர்ட்மவுண்ட் பகுதியில் உள்ள சாலையில் ஒரு திருவள்ளுவர் சிலையை நிறுவ வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட்டனர் சபேசன் தம்பதியர். ஜெர்மானிய சிற்பி ஒருவரே இச்சிலையை வடிவமைத்தார்.

7.12.2024 அன்று இச்சிலை நிறுவப்பட்டது. இச்சிலை உள்ள பகுதி இப்போது திருவள்ளுவர் சந்தி என்றும் அழைக்கப்படுகிறது.

பயணத்தில் இருப்பதால் நான் நேரில் கலந்து கொள்ள இயலாத சூழலினால் தோழர்களின் அன்பு வேண்டுகோளுக்கிணங்க திருக்குறளுக்கும் ஜெர்மனிக்குமான தொடர்பை விளக்கியும் வாழ்த்துச் செய்தியாகவும் தமிழ், ஆங்கிலம், ஜெர்மன் ஆகிய மூன்று மொழிகளில் தனது காணொளிகளைத் தயாரித்து அனுப்பியிருந்தார் முனைவர் க.சுபாஷினி.

அவை நிகழ்வில் திரையிடப்பட்டன என்ற செய்தி அறிந்து மகிழ்கிறேன் என்று அவர் குறிப்பிட்டார்.

திருவள்ளுவர் சிலையை பொது பகுதியில் நிறுவி சாதனை படைத்த சபேசன் தம்பதி குழுவினர் மேலும் டோர்ட்மவுண்ட் பகுதி தமிழ் நெஞ்சங்களுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நல்வாழ்த்துகள் என்றும் அதன் தலைவருமான முனைவர் சுபாஷினி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here