பணி ஓய்வுக்குப் பின்னர் கெளரவமான வாழ்க்கை; EPF அறிமுகம்

கோலாலம்பூர்:

யதான காலத்தில் கெளரவமான வாழ்க்கை, பணி ஓய்வுபெற்ற பின்னர் போதுமான வருமானம், மாதாந்திர வாழ்க்கை செலவுகளை சிறப்பாக நிர்வகித்தல் ஆகியவற்றை உறுதி செய்வதற்கு EPF எனப்படும் ஊழியர் சேமநிதி வாரியம் Belanjawanku 2024 – 2025 வழிகாட்டியை அறிவித்திருக்கிறது.

அதேசமயத்தில் மலேசியர்கள் மேற்குறிப்பிட்ட அம்சங்களை திட்டமிட உதவுவதற்கு ஒரு புதிய பணி ஓய்வு வருமான நிறைவு கட்டமைப்பையும் இபிஎஃப் அறிமுகம் செய்திருக்கிறது.

Belanjawanku வழிகாட்டியானது ஒரு கெளரவமான வாழ்க்கைக்கு தேவையான செலவை மதிப்பீடு செய்கிறது. மேலும் பணி ஓய்வு காலத்தில் ஒருவருக்கு போதுமான வருமானம் இருப்பதையும் இது உறுதி செய்கிறது.

இக்கட்டமைப்பானது பணி ஓய்வுபெற்ற பின்னர் மூன்று கட்ட சேமிப்பு முறையை வகுத்து போதுமான வருமானத்தையும் உறுதி செய்கிறது.

இப்புதிய கட்டமைப்பு 2026 ஜனவரியில் அறிமுகம் காண்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here