பெரும்பாலானோரின் மிகவும் விருப்பமான ஒரு காய்கறி என்றால் அது உருளைகிழங்கு என்றே கூறலாம். இதனால் நிறைய பேர் தங்கள் வீடுகளில் உருளைக்கிழங்கை நிறையவே வாங்கி வைத்திருப்பார்கள். இப்படி வைத்திருக்கும் போது, சில சமயங்களில் அவை முளைக்கட்ட தொடங்கிவிடும்.
மேலும் சிலர் உருளைக்கிழங்கை வாங்கும் போது சரியாக கவனிக்காமல் பச்சையாக இருக்கும் உருளைக்கிழங்கை வாங்கியிருப்பார்கள். இப்படி பச்சையாக இருக்கும் உருளைக்கிழங்கு மற்றும் முளைக்கட்டிய உருளைக்கிழங்கை சாப்பிடலாமா என்ற கேள்வி பலருக்கும் இருக்கும்.
உருளைக்கிழங்கில் பச்சை நிறமானது குளோரோபில்லில் இருந்து வருகிறது. இது நச்சுத்தன்மையற்றது. இருப்பினும், அதில் அதிகளவில் கிளைகோஅல்கலாய்டு இருக்கும். அதுவும் உருளைக்கிழங்கு முளைக்கட்ட தொடங்கும் போது, அதில் கிளைகோஅல்கலாய்டு அளவு அதிகரிக்கத் தொடங்குகிறது. இதன் விளைவாக இப்படியான உருளைக்கிழங்குகளை உட்கொண்ட சில மணிநேரங்கள் முதல் ஒரு நாள் வரை ஒருசில பக்கவிளைவுகள் தெரியத் தொடங்கும்.
அதுவும் சோலனைன் ஒரு நச்சுப்பொருள். இது குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் நரம்பியல் பிரச்சனைகளை கூட ஏற்படுத்தும். மேலும் அதிக காய்ச்சல், மனக்குழப்பம் ,குறைவான இரத்த அழுத்தம், வேகமான இதயத் துடிப்பு, தலைவலி , ஏன் மரணம் கூட ஏற்படலாம். உஷாரா இருங்க மக்களே.