கோலாலம்பூர் :
அமெரிக்க டாலருக்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு கடந்த சில நாட்களாக சரிவை சந்தித்துவந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி, 1 அமெரிக்க டாலருக்கு நிகரான மலேசிய ரிங்கிட்டின் பெறுமதி 4.44 ஆக வர்த்தகமானது.
அதேநேரத்தில் ஜப்பானிய யென்னுக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு 2.89 ஆக உயர்ந்துள்ளது.
பிரிட்டிஷ் பவுண்டுக்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு, 5.6441 இலிருந்து 5.6301 ஆக குறைந்துள்ளது. மேலும் மற்ற ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும் போது மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு நிலையாகவுள்ளது என்று மலேசிய முஹமலாட் வங்கியின், தலைமைப் பொருளாதார நிபுணர் டாக்டர் முஹமட் ஆப்ஸானிசாம் அப்துல் ரசீட் கூறினார்.