அல்லு அர்ஜுன் நடித்துள்ள ‘புஷ்பா 2’ திரைப்படம் இரண்டு வாரங்களில் மட்டும் ரூ.1,508 கோடியை வசூலித்துள்ளது. இந்தி மொழியில் மட்டும் அது ரூ.618 கோடியை வசூலித்துள்ளது.
இதன் மூலம் ‘புஷ்பா 2’ பாலிவுட்டில் இரண்டாவது மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த படமாக மாறியுள்ளது.
தமிழ் மொழியில் மட்டும் அது ரூ.60 கோடி வசூலை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அல்லு அர்ஜுனின் திரையுலகப் பயணத்தில் ரூ.1,500 கோடி வசூல் என்பது புதிய மைல்கல்.
இனிவரும் வாரங்களிலும் ‘புஷ்பா 2’ படம் திரையரங்குகளில் நல்ல வசூலை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், ‘பாகுபலி 2’ படத்தின் மொத்த வசூலான ரூ.1,800 கோடி சாதனையை அது நெருங்கலாம் என்று கூறப்படுகிறது.