லியோனல் மெஸ்ஸியின் இன்டர் மியாமி போட்டிகள்

லியோனல் மெஸ்ஸி கடந்த சீசனில் தன் இன்டர் மியாமி அணியை சிறந்த முறையில் வழி நடத்தினார். என்னதான் லியோனல் மெஸ்ஸி தன் அணியை சிறப்பாக வழிநடத்தினாலும் அந்த அணி பிளேஆஃப் முதல் ரவுண்டில் அட்லாண்டாவிற்கு எதிராக தோல்வியை சந்தித்து வெளியேறியது. இது லியோனல் மெஸ்ஸிக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது.

அவருக்கு மற்றுமின்றி அவரின் ரசிகர்களுக்கும் இந்த செய்து ஏமாற்றத்தை தந்தது. இந்நிலையில் 2025 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் மேஜர் லீக் சாக்கரில் இன்டர் மியாமி விளையாடப்போகும் போட்டிகள் பற்றிய தகவல் தற்போது கிடைத்துள்ளது. அடுத்தாண்டு நடைபெறும் மேஜர் சாக்கரில் முதல் போட்டியில் இன்டர் மியாமி அணி நியூ யார்க் அணியை எதிர்கொள்கிறது.

இந்த போட்டி பிப்ரவரி 22 ஆம் தேதி நடைபெறுகின்றது. இதைத்தொடர்ந்து அட்லாண்டா யுனைடெட் அணியுடன் மார்ச் 16 ஆம் தேதி மோதுகிறது. நடந்து முடிந்த தொடரில் பிளேஆஃப் சுற்றில் அட்லாண்டா அணியுடன் மோதி தோல்வியை சந்தித்து வெளியேறியது இன்டர் மியாமி அணி. இதற்கு மார்ச் 16 ஆம் தேதி நடைபெறும் போட்டியில் இன்டர் மியாமி பழி வாங்கவேண்டும் என்பது தான் லியோனல் மெஸ்ஸி ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

இப்போட்டியை காண தற்போதே ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர். அதைத்தொடர்ந்து இன்டர் மியாமி 2023 MLS கோப்பையை கைப்பற்றிய சாம்பியனான கொலம்பஸ் க்ரூவுடன் ஏப்ரல் 19 அன்று விளையாடுகிறது. இதையடுத்து மே 10 அன்று மினசோட்டாவிற்கும் , மே 14 அன்று சான் ஜோஸுக்கும் சென்று குறுகிய நாட்களில் நான்கு போட்டிகளில் விளையாடவுள்ளது.

இந்நிலையில் மேஜர் லீக் சாக்கர் தொடர் துவங்கும் முன்பே இன்டர் மியாமி தங்களின் பயிற்சியை மேற்கொள்ள உள்ளது. புத்தாண்டு துவங்கிய சில நாட்களிலேயே லாஸ் வேகாஸில் மெக்சிகன் சாம்பியன்களான கிளப் அமெரிக்காவிற்கு எதிராக ஜனவரி 18 அன்று நடைபெறும் போட்டியில் இன்டர் மியாமி விளையாடவுள்ளது.அதைத்தொடர்ந்து அடுத்தடுத்து பல ஆட்டங்களில் விளையாடி MLS தொடருக்கான தங்களை தயார் நிலையில் வைத்துக்கொள்ள இன்டர் மியாமி முடிவெடுத்துள்ளது.

ஆனால் அனைத்து ஆட்டங்களிலும் லியோனல் மெஸ்ஸி விளையாடுவாரா என்பதும் ஒருபக்கம் கேள்வியாக இருந்து வருகின்றது. மேலும் இந்தாண்டு உலகக்கோப்பைக்கான தகுதி ஆட்டங்கள் நடைபெறும். அதற்காக அர்ஜன்டினா அணிக்காக லியோனல் மெஸ்ஸி பங்கேற்க செல்வார். அப்போது இன்டர் மியாமி அணிக்காக அவர் சில ஆட்டங்களில் விளையாடமாட்டார் என்றே தெரிகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here