பிரமாண்ட விழாக் கொண்டாட்டங்கள், கலைபடைப்புகளுடன் சிலாங்கூர் வருகையாண்டு 2025 அறிமுகம்

செத்தியா ஆலம்:

சிலாங்கூர் மாநிலத்தின் அதிகாரப்பூர்வ சுற்றுலா விளம்பர ஏஜென்சியான Tourism Selangor வெற்றிகரமாக சிலாங்கூர் 2025 வருகையாண்டை VSY 2025 அறிமுகம் செய்தது.

‘ஆச்சரியமிகு சிலாங்கூர்’ (Surprising Selangor) எனும் அடைமொழியுடன் கோலாகலமாக தொடங்கியிருக்கும் சிலாங்கூர் வருகையாண்டு 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் கிட்டத்தட்ட 80 லட்சம் சுற்றுப்பயணிகளை கவர்வதற்கு இலக்குக்கொண்டுள்ளது.

 

செத்தியா ஆலம், செத்தியா சிட்டி பார்க்கில் மூன்று நாட்கள் கொண்டாட்டமாக 2024, டிசம்பர் 20 முதல் 22 வரை நடைபெற்ற சிலாங்கூர் 2025 வருகையாண்டு பிரச்சாரத்தை சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் பின் ஷாரி அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.

சிலாங்கூரின் வளம்மிகு கலாச்சாரங்கள் 5,000 க்கும் அதிகமான வருகையாளர்களை கவர்ந்திழுத்தது. சிலாங்கூரின் கண்கவர் இயற்கை வளங்கள், பல்வேறு கவர்ச்சிகரமான அழகு பொக்கிஷங்கள் இந்த பிரமாண்ட அறிமுக நிகழ்ச்சிக்கு அழகு சேர்த்தன.

Tourism Selangor-ரின் வியூக பங்காளிகளான CUCKOO, ANBOT Store, ஷா ஆலம் நகராண்மை மன்றம், மேரியட் செத்தியா ஆலம் ஆகிய தரப்புக்களின் இந்த மைல்கல் நிகழ்ச்சி சாத்தியமானது.

2024 டிசம்பர் 21 ஆம் தேதி நடைபெற்ற இலவச கலை நிகழ்ச்சி இக்கொண்டாட்டத்தின் முத்தாய்ப்பாக விளங்கியது. இந்த நிகழ்ச்சியில் தான் 2025 சிலாங்கூர் வருகையாண்டின் SPARK the Fireflies எனப்படும் மின்மினி பூச்சி மாஸ்கோட்டை டூரிசம் சிலாங்கூர் அறிமுகம் செய்தது.

மேலும் இப்பிச்சாரத்தின் visitselangor2025.my எனப்படும் டிஜிட்டல் போர்ட்டலும் அறிமுகம் செய்யப்பட்டது. அதிகாரப்பூர்வப் பாடலை அய்ஸாட் அம்டான் மேடையில் பாடி அசத்தினார். ஆண்டு முழுவதும் மனத்தை வசீகரிக்கும் விதமாக ஒவ்வொரு படைப்பும் அமைந்தது.

Cakra Khan, Datuk Amy Search, Ameng Spring, Zubir Khan, Suki Low, உட்பட பிரபல கலைஞர்களின் படைப்புகள் நீண்ட காலத்திற்கு காதுகளில் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கும்.

காதுகளுக்கும் கண்களுக்கும் இசை படைப்புகள் இனிமை சேர்த்த நிலையில், சிலாங்கூரில் மிகவும் பிரபலமான 60 வகை உணவு வகைகள் 70 முகப்பிடங்களில் இடம் பெற்றிருந்தன. உணவை நேசிக்கும் கண்காட்சி அறுசுவை விருந்து படைத்தது.

சுற்றுலா கண்காட்சிகள், வான வேடிக்கைகள், அதிர்ஷ்ட குலுக்கு, சிலாங்கூரின் வளமிகு கலாச்சார மரபுகள் போன்றவை உச்சம் பெற்றன.

2025 சிலாங்கூர் வருகையாண்டு அவ்வாண்டிற்கான சிலாங்கூரின் அதி முக்கிய மைல் கல்லாக முத்திரைப் பதித்திருக்கிறது என்று சிலாங்கூர் மாநில ஊராட்சி, சுற்றுலாத் துறை ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இங் சுய் லிம் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

இத்திட்டம் மாபெரும் வெற்றியை பதிவு செய்வதை உறுதி செய்வதற்கு சிலாங்கூர் மாநில அரசாங்கம் அதன் 2025 பட்ஜெட்டில் 8 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கி இருக்கிறது என்று அவர் சொன்னார்.

Art of Speed Malaysia, Selangor Travel Fair உட்பட பல்வேறு திட்டங்களுக்கு நிதி அளிப்பதற்கும், உள்ளூர் சுற்றுலா நடத்துனர்களுக்கு மானியங்கள் வழங்குவதற்கும் இந்த ஒதுக்கீடு பயன்படுத்தப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here