ஜோகூர் பாரு:
நேற்று நள்ளிரவில், தாமான் தேசா ஸ்கூடாய் சுற்றுவட்டப் பாதை அருகே ஜாலான் பொந்தியான் லாமா செல்லும் சாலையில், கார் மற்றும் லோரி மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர், ஒருவர் உயிர் பிழைத்தார்.
இந்த சம்பவம் குறித்து நள்ளிரவு 12.11 மணியளவில் புகார் கிடைத்ததாக ஸ்கூடாய் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் செயல்பாட்டுத் தளபதி சுரைனி அட்னான் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து, இரண்டு இயந்திரங்களுடன் ஏழு உறுப்பினர்கள் அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டனர், அவர்கள் அங்கு வந்தவுடன், புரோத்தோன் வாஜா மற்றும் 10 டன் லோரி விபத்தில் சம்பந்தப்பட்டிருந்ததை கண்டறிந்தனர்.
“இந்த மோதலின் விளைவாக, கணேஷ் A/L ராஜா சாகரன் மற்றும் பரணி குமார் A/L சுபோரினம் ஆகியோர் உயிரிழந்ததாக அவர் கூறினார். அதேநேரம் 43 வயதான ஆண் ஒருவர் காயத்துடன் உயிர் தப்பினார்” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.