போதையில் வங்கிக்குள் காரைச் செலுத்திய ஆடவர் கைது

கோத்தா கினபாலு:

போதையிலிருந்த ஆடவர் ஒருவர் ஓட்டிய கார் கட்டுப்பாட்டை இழந்ததால், சாலையிலிருந்து வழுக்கிச் சென்று ஐந்து வாகனங்கள்மீது மோதி, பின்னர் வங்கி ஒன்றின் கண்ணாடிக் கதவுமீது மோதி அதனை நொறுக்கியது.

இச்சம்பவம் தாவாவில் உள்ள ஜாலான் மஹ்காமா பகுதியில் இன்று (டிசம்பர் 29) அதிகாலை 5.15 மணியளவில் நடந்தது என்று காவல்துறைத் துணை ஆணையர் ஜாஸ்மின் ஹுசைன் கூறினார்.

அந்த 25 வயது ஆடவர் நகர மையத்திலிருந்து தஞ்சுங் பத்துவிலுள்ள தமது வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தபோது இவ்விபத்து நடந்ததாகவும், குறித்த இளைஞர் போதையில் இருந்ததும் அவரிடம் ஓட்டுநர் உரிமம் இல்லாததும் ஆரம்ப விசாரணையில் தெரியவந்தது என்று அவர் சொன்னார்.

“இச்சம்பவத்தில் எவருக்கும் காயமேற்படவில்லை,” என்றும் ஹுசைன் கூறினார்.

காவல்துறை அவ்வாடைவரை கைதுசெய்து, அவர்மீது வழக்கு பதிவு செய்துள்ளது.

மேலும் இவ்விபத்து தொடர்பான எட்டு வினாடிகள் கொண்ட காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here