உத்தரபிரதேசத்தில் தனது காதலியின் ஆபாச புகைப்படத்தை வைத்து மிரட்டிய தனது நண்பரை 16 வயது சிறுவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மீரட் நகரில் உள்ள ஒரு பள்ளியில் அபினவ் என்ற சிறுவன் 11 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். அண்மையில் தனது நண்பனின் செல்போனில் இருந்து அவனது காதலியின் ஆபாச புகைப்படங்களை அபினவ் தனது செல்போனுக்கு அனுப்பியுள்ளான்
பின்னர், அவனது காதலியை நேரில் சந்தித்து இந்த ஆபாச புகைப்படங்களை காட்டி நான் சொல்வது போல நீ நடந்து கொள்ள வேண்டும் இல்லையென்றால் இந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியுள்ளான்.
இதனால் பதற்றமடைந்த அந்த பெண், நடந்த சம்பவத்தை காதலனிடம் தெரிவித்தார். இதனை கேட்டு ஆத்திரமடைந்த காதலன், அபினவை காளி நதிக்கரைக்கு கூட்டிச் சென்று சுத்தியலால் தாக்கி கொலை செய்துள்ளார்.இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், கொலை செய்த சிறுவனை கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.