கோலக்கிராய்:
கடந்த மாவட்டத்தில் பெய்த கனமழையை தொடர்ந்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை (டிச. 29) வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், இன்று திங்கள்கிழமை (டிச. 30) அப்பகுதியில் சாதகமான வானிலை நிலவிவருவதால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆற்று நீர் மட்டம் கணிசமாகக் குறைந்துள்ளதாலும் அங்கு வெள்ள நிலைமை மேம்பட்டு வருகிறது என்று கோலக்கிராய் பேரிடர் செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையத் தலைவர் நிக் முகமட் ஹசானுடின் நிக் ஹுசைன் கூறினார்.
நேற்று வெள்ளம் காரணமாக வெளியேற்றப்பட்டவர்கள் தங்குவதற்காக சுச்சோ பூத்திரியில் திறக்கப்பட்டிருந்த மூன்று தற்காலிக நிவாரண மையங்கள் இன்று திங்கள்கிழமை (டிசம்பர் 30) காலை 11 மணிக்கு மூடப்பட்டன, அதே சமயம் செனுலாங்கில் இன்றும் ஒரு தற்காலிக நிவாரண மையம் செயற்பாட்டில் உள்ளது என்று அவர் சொன்னார்.