கோலாலம்பூர்:
தாமான் ஸ்ரீ ஆலம், சௌஜானா உத்தாமா குடியிருப்புப் பகுதிக்கு அடுத்துள்ள நீர் தேக்கத்தின் அணைக்கட்டு உடைந்ததால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க அதன் மேம்பாட்டு நிறுவனம் பரிசீலித்து வருகிறது.
இழப்பீட்டுத் தொகை குறித்து விவாதிப்பதற்காக மேம்பாட்டு நிறுவனம் மற்றும் குடியிருப்பாளர்களின் பிரதிநிதிகளுக்கு இடையே இன்று கூட்டம் நடைபெறஉள்ளதாக சிலாங்கூர் உள்கட்டமைப்பு மற்றும் விவசாயக் குழுத் தலைவர் டத்தோ இஸ்ஹாம் ஹாஷிம் கூறினார்.
“எங்கள் ஆரம்ப விவாதங்களின் அடிப்படையில், குறித்த மேம்பாட்டு நிறுவனம் இழப்பீடு வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிகிறது. இருப்பினும், இது முறையான இழப்பீட்டைக் காட்டிலும் கூடுதல் கருணைத் தொகையாக இருக்கும்” என்று அவர் கூறினார்.