மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் மூன்றாவது வீரராக இன்று களம் இறங்கினார். இந்த தொடர் முழுவதும் கேஎல் ராகுல் தொடக்க வீரராக களம் இறங்கிய நிலையில் இன்றைய ஆட்டத்தில் ரோகித் சர்மா ஓபனிங் வந்ததால் கே எல் ராகுல் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
இந்த சூழலில் கில்லுக்கு பதிலாக கே எல் ராகுல் அந்த இடத்தில் விளையாடினார். கே எல் ராகுல் நல்ல பார்மில் இருந்ததால் இன்றைய ஆட்டத்தில் அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆடுகளமும் பெரிய அளவு பேட்ஸ்மேன்களை நெருக்கடிக்கு ஆளாக்கவில்லை.
இதனால் இந்திய அணி வீரர்கள் தங்களுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக கேஎல் ராகுல் எந்த நெருக்கடியையும் இன்றி விளையாடினார். 42 பந்துகளை எதிர்கொண்டு மூன்று பவுண்டரிகள் என மொத்தம் 24 ரன்கள் சேர்த்தார்.
2024 ஆம் ஆண்டில் வீசப்பட்ட சிறந்த பந்துகளிலே இது தான் சிறந்தது ஒன என்று ரசிகர்கள் போற்றும் அளவு கம்மின்ஸ் பந்துவீச்சு இருந்தது. எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும் அந்த பந்தை தொட முடியாமல் இருந்திருக்கும். அப்படிப்பட்ட பந்தில் தான் கே எல் ராகுல் ஆட்டம் இழந்தார். இது இந்தியாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் கேஎல் ராகுல் தொடக்க வீரராகவே களம் இறங்கி இருக்கலாம். தேவையில்லாமல் பேட்டிங் வரிசையில் மாற்றம் செய்து இருக்கிறார்கள் என ரசிகர்கள் இந்திய அணி நிர்வாகத்தை சாடி வருகின்றனர்.
இதன் மூலம் நடப்பு பார்டர் கவாஸ்கர் தொடரில் 500 பந்துகளை எதிர்கொண்ட முதல் இந்திய வீரர் என்ற பெருமையை கேஎல் ராகுல் பெற்றார். ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 474 ரன்கள் குவித்த நிலையில் அந்த இலக்கு அருகே வந்தால் மட்டுமே இந்த போட்டியில் இருந்து இந்தியா தப்பிக்க முடியும். இதனால் கே எல் ராகுல் உள்ளிட்ட வீரர்கள் பெரிய இன்னிங்ஸ் ஆட வேண்டிய நெருக்கடியில் இருந்தனர். ஆனால் திடீரென்று யாருமே எதிர்பாராத வகையில் பாட் கம்மின்ஸ் வீசிய வந்து ஒன்று கணிக்க முடியாத வகையில் கே எல் ராகுலின் ஸ்டெம்பை பதம் பார்த்தது.