முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் ஆதரவு பேரணி வரும் ஜனவரி 6 ஆம் தேதி திங்கட்கிழமை நடைபெற உள்ளது.
இந்நிலையில் அரச மன்னிப்பு விவகாரத்தில் அரண்மனையின் அறிக்கைக்கும் நிலைப்பாட்டிற்கும் செவி சாய்க்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பொது மக்களையும் அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொண்டார்.
ஒருவருக்கு நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்யும் அல்லது மன்னிக்கும் அதிகாரம் மாட்சிமை தங்கிய பேரரசருக்கு மட்டுமே உள்ளது.
இதனை பொது மக்கள் உட்பட அனைத்து தரப்பினரும் மதிக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
அரண்மனை உத்தரவை வாசித்து, புரிந்து கொண்டு மதிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும் இப்பேரணி ஏற்பாட்டில் பக்காத்தான் ஹராப்பான் சம்பந்தப்படவில்லை என்பதை தெளிவுப்படுத்திய அன்வார், இது குறித்து கேள்விகள் இருந்தால் இப்பேரணியை ஏற்பாடு செய்யும் துணைப் பிரதமரும் அம்னோ தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் அமாட் ஸாஹிட் ஹமிடியிடம் கேட்குமாறு செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.



















