வாக்குவாதத்தின் போது தனது அத்தையை கத்தியால் குத்திய 14 வயது சிறுமி கைது

பினாங்கு, பட்டர்வொர்த்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது தனது அத்தையை கத்தியால் குத்திய 14 வயது சிறுமி கைது செய்யப்பட்டுள்ளார். செபராங் பிறை தெங்கா போலீஸ் தலைவர் ஹெல்மி அரிஸ் 35 வயதான பெண், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்ழ் அதே நேரத்தில் இளம்பெண் சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.

காலை 11.30 மணியளவில் பெண்ணை அவரது மருமகள் கத்தியால் குத்தியதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததாக அவர் கூறினார். சிறுமி தனது குடும்பத்துடன் சில பிரச்சனைகள் காரணமாக கடந்த நான்கு நாட்களாக தனது அத்தையுடன் வசித்து வந்ததாக அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஆனால் அத்தை தனது தாயுடன் வாழ திரும்பிய மருமகளை தடுக்க முயன்றபோது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here