கோமா நிலையில் 15 மாதங்களாக சிகிச்சை பெற்றுவந்த கல்லூரி மாணவி உயிரிழப்பு

கோழிக்கோடு,கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள கோண்டன் குளங்கரா பகுதியை சேர்ந்தவர் வாணி சோமசேகரன் (வயது 24). இவர் கோட்டயம் மாவட்டம் ஏட்டுமானூரில் உள்ள சட்டக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சட்டக்கல்லூரி அருகே சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வேகமாக வந்த கார் வாணி சோமசேகரன் மீது மோதியது. இதில் அவருக்கு தலையில் அடிப்பட்டு பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக தெள்ளகம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். கோமா நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல் சிகிச்கைக்காக வெள்ளூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதனைத்தொடர்ந்து கடந்த 3 மாதங்களாக வெண்டிலேட்டர் உதவியுடன் வீட்டில் வைத்தே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சுமார் 15 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த வாணி சோமசேகரன் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here