கோலாலம்பூர்:
கிளந்தான், திரெங்கானு, பகாங் மற்றும் ஜோகூர் ஆகிய பகுதிகளுக்கு கடந்த ஜனவரி 1ஆம் தேதி வெளியிடப்பட்ட தொடர் மழைக்கான எச்சரிக்கை நிலை இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது.
வானிலை மாதிரிகளின் பகுப்பாய்வு அடிப்படையில், சம்பந்தப்பட்ட மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்பில்லை என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia), இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 5) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் சமீபத்திய வானிலை பற்றிய தகவல்களை MetMalaysia இன் அதிகாரப்பூர்வ இணையதளம்,சமூக ஊடகங்கள் மற்றும் myCuaca மொபைல் அப்ளிகேஷன் ஆகியவற்றில் மூலமாவும் 1-300-22-1638 இல் MetMalaysia ஹாட்லைன் மூலமாகவும் பெற்றுக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.