காஜாங்:
யாப் சின் யுவான் கொலை வழக்குடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களின் விளக்கமறியல் மேலும் ஐந்து நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனை காஜாங் மாவட்ட காவல்துறை துணை தலைவர் நஸ்ரோன் அப்துல் யூசோப் உறுதிப்படுத்தினார்.
மூன்று சந்தேக நபர்களில் பாதிக்கப்பட்டவரின் காதலன் மற்றும் அவரது தந்தை மற்றும் சகோதரர் ஆகியோர் அடங்குவர்.
இந்நிலையில், யாப்பின் காதலன் தனியாக இருந்தாரா அல்லது கூட்டாளிகளுடன் சேர்ந்து அவரது உடலை ஆற்றில் வீசியாரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும், கொலைக்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது என்றும் சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் ஆணையர் டத்தோ ஹுசைன் ஓமர் கான் தெரிவித்தார்.
யாப்பின் உடல் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 29) கண்டெடுக்கப்பட்டதாகவும், கடந்த திங்கள்கிழமை (டிசம்பர் 30), அவரது தாயின் டிஎன்ஏ சோதனைக்குப் பிறகு சடலம் யாப்புடையதுதான் என அடையாளம் காணப்பட்டது என்றும், பின்னர் பாதிக்கப்பட்ட பெண்ணின் காதலன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் முன்னர் போலீஸ் தரப்பு கூறியிருந்தது.
மேலும் கடந்த 19 அன்று, பத்து 11 செராஸில் உள்ள கூடைப்பந்து மைதானத்தில் சிங்க நடனப் பயிற்சிக்குப் சென்ற பிறகு, 15 வயதான யாப் சின் யுவான் என்ற இளம்பெண் காணாமல் போனார் என்பது குறிப்பிடத்தக்கது