செல்வ வளம் பெருக வைகுண்ட ஏகாதசி பரிகாரம்

ஒவ்வொரு மாதமும் வளர்பிறை ஏகாதசி தேய்பிறை ஏகாதசி என்று இரண்டு ஏகாதசிகள் வரும். இந்த இரண்டு நாட்களிலும் பெருமாளை வழிபாடு செய்வது என்பது நல்ல பலனை தரும்.  வருடம் முழுவதும் வரக்கூடிய ஏகாதசி விரதத்தை கடைபிடிக்காதவர்கள் கூட மார்கழி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை ஏகாதசியை கடைப்பிடிப்பார்கள். இதற்கு முக்கியமான காரணம் அன்றுதான் சொர்க்கவாசல் திறப்பு என்பது அனைத்து பெருமாள் ஆலயங்களிலும் நடைபெறும். அன்றைய தினம் விரதம் இருந்து இரவு கண் விழித்து பெருமாளை வழிபாடு செய்யும் வழக்கம் என்பதை பலரும் பின்பற்றி வருகிறார்கள். அப்படிப்பட்ட நாளில் வருடம் முழுவதும் செல்வநிலை பெருகுவதற்கு செய்ய வேண்டிய பரிகாரத்தை பற்றி நாம் பார்க்க போகிறோம்.

வைகுண்ட ஏகாதசி பரிகாரம் பெருமாளை வழிபாடு செய்பவர்களுக்கு மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். மகாலட்சுமி பெருமாளின் இதயத்தில் வீற்றிருக்கிறார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதனால் பெருமாளை வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய செல்வ வளம் என்பது பெருகும். மேலும் நம்முடைய வாழ்க்கையை நடத்துவதற்கு தேவையான அனைத்து விஷயங்களும் நமக்கு கிடைக்கும். அதனால்தான் பெருமாளை காக்கும் தெய்வம் என்று கூறுகிறோம். அப்படிப்பட்ட பெருமாளை நினைத்து வைகுண்ட ஏகாதசி அன்று செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.
இந்த பரிகாரத்தை வைகுண்ட ஏகாதசி பிறக்கக்கூடிய ஜனவரி ஒன்பதாம் தேதியும் செய்யலாம் அல்லது ஜனவரி 10ஆம் தேதியும் செய்யலாம். இதற்கு பெருமாளுக்கு உகந்த பிடித்தமான பொருட்கள் 3 வேண்டும். அதில் முதன்மையாக திகழவது துளசி இலை. பொதுவாக ஏகாதசி நாளன்று துளசியை பரிக்கக்கூடாது என்று கூறுவார்கள். அதனால் ஏகாதசி திதி தொடங்குவதற்கு முன்பாகவே துளசி இலையை பரித்து வைத்துக் கொள்ளுங்கள்.
அப்படி இல்லாத பட்சத்தில் கடையிலிருந்து காசு கொடுத்து கூட வாங்கிக் கொள்ளலாம். அப்படி வாங்கும் பொழுது அதனுடன் பச்சை கற்பூரம், ஜாதிக்காய் இவற்றையும் வாங்க வேண்டும். வீட்டில் ஏற்கனவே இந்த பொருட்கள் இருந்தாலும் புதிதாக அன்றைய தினம் வாங்கிக் கொள்ளுங்கள். இவை மூன்றையும் ஒரு அகல் விளக்கில் வைத்து பெருமாளுக்கு முன்பாக வைத்து விடுங்கள்.
நீங்கள் எப்பொழுதும் போல் ஏகாதசி வழிபாட்டை செய்து பெருமாளுக்கு உரிய மந்திரங்களை கூறி பெருமாளை வழிபாடு செய்து கொள்ளலாம். ஏகாதசி விரதம் நிறைவடைந்த பிறகு இந்த அகல் விளக்கில் இருக்கக்கூடிய இந்த மூன்று பொருட்களையும் எடுத்து ஒரு சுத்தமான மஞ்சள் துணியில் கட்டி எந்த இடத்தில் நாம் பணத்தை வைத்திருக்கிறோமோ அந்த இடத்தில் வைக்க வேண்டும்.
துணி இல்லை என்பவர்கள் அந்த அகல் விளக்கியே அப்படியே எடுத்துக் கொண்டு போய் வைக்கலாம். முக்கியமான குறிப்பு என்னவென்றால் இந்த முடிச்சிருக்கு கீழ் கண்டிப்பான முறையில் பணம் இருக்க வேண்டும். பணத்திற்கு மேல் தான் இந்த முடிச்சை வைக்க வேண்டும். இப்படி நாம் வைகுண்ட ஏகாதசி நாளன்று பெருமாளை நினைத்து இந்த ஒரு எளிமையான பரிகாரத்தை செய்தோம் என்றால் நம் வாழ்வில் செல்வ வளம் என்பது பெருகிக்கொண்டே செல்லும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here