மலேசியாவில் மேலும் இரு இடங்களில் சிங்கப்பூர் தூதரகத்தை திறக்க திட்டம்

கோலாலம்பூர்:

மலேசியாவில் இரண்டு இடங்களில் அதாவது சபா மற்றும் சராவாக்கில் புதிய சிங்கப்பூர் தூதரக அலுவலகங்கள் திறக்கப்படவிருக்கின்றன.

கிழக்கு மலேசியாவுடன் பொருளாதார தொடர்பை ஆழமாக பேணவும், இரு நாட்டு மக்களிடையே நல் உறவை வலுப்படுத்தவும் சிங்கப்பூர் இந்தப் புதிய தூதரங்களை திறக்கிறது என்று, மலேசியாவிற்கு இரு நாட்கள் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் பிரதமர் தெரிவித்தார்.

சில மலேசிய பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிக்க சிங்கப்பூரைச் சேர்ந்த தொண்டூழியர்களுக்கு உதவும் வகையில் மலேசியாவும் சிங்கப்பூரும் இந்தப் புதிய திட்டத்தையும் தொடங்குகின்றன.

மலேசியா-சிங்கப்பூர் தொண்டூழியர்கள் திட்டம் என்று அழைக்கப்படும் அந்தத் திட்டம் 2025ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது மட்டுமல்லாமல், இது போன்ற பிற முயற்சிகளையும் கூட்டு அறிக்கையில் சிங்கை பிரதமர் லாரன்ஸ் வோங்கும் பிரதமர் அன்வார் இப்ராகிமும் பகிர்ந்துகொண்டனர் என்பது கவனிக்கத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here