புத்ராஜெயா:
விதி மீறல்கள் காரணமாக கடந்தாண்டு நாடு முழுவதும் மொத்தம் 61 குழந்தை பராமரிப்பு மையங்களின் பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன, அவற்றில் 94 மையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதில் 22 மையங்களுக்கு அபராதங்கள், 5 மையங்கள் தற்காலிகமாக மூடபட்டன, 8 மையங்கள் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டன மற்றும் ஒரு பராமரிப்பு மையத்திற்கு எழுத்துப்பூர்வ அறிவிப்பு வழங்கப்பட்டது போன்ற சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்று பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் டத்தோஸ்ரீ நான்சி ஷுக்ரி கூறினார்.