கோலாலம்பூர்:
கடந்த ஜனவரி 10 ஆம் தேதி 24 வயது மலேசிய ஆண் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று நோய் ஏற்பட்டதாக சுகாதார அமைச்சகம் அடையாளம் கண்டுள்ளது.
நோயாளி கடந்த 21 நாட்களில் வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ளதாகவும், அவர் ஜனவரி 10, 2025 அன்று சிகிச்சை பெற்றார், இருப்பினும் அவரது உடல்நிலை இப்போது நிலையாக உள்ளது என்றும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்” என்று சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தப் புதிய குரங்கம்மை தொற்றினை தொடர்ந்து, மலேசியாவில் கடந்த ஜூலை 2023 முதல் இன்றுவரை பதிவான குரங்கம்மை தொற்றின் மொத்த எண்ணிக்கையை 12 ஆக உயர்த்தியுள்ளது.