கோலாலம்பூர்:
ஜாலான் பாம்பங்கானில் உள்ள கம்போங் சினோகோவில் இணைய இணைப்பை நிறுவும் போது ஆடவர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக நம்பப்படுகிறது.
பாதிக்கப்பட்ட 19 வயதான அந்த நபர், மின்கம்பத்தின் அருகே இணைப்பை கொடுத்துக்கொண்டிருந்தார் என்று, சபா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் குறித்து தீயணைப்பு துறைக்கு நேற்று மாலை 4.20 மணியளவில் தகவல் கிடைத்தது என்றும், உடனே கிமானிஸ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தில் இருந்து ஐந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.

இருப்பினும் தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன்பு பாதிக்கப்பட்டவர் அவரது சக ஊழியரால் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார், இருப்பினும் அங்கிருந்த மருத்துவரால் அவர் இறந்துவிட்டார் என்பதை உறுதிப்படுத்தினார்.





















