RM10,000 மதிப்புள்ள பழங்கள் கடத்தல்; தாய்லாந்துப் பெண் கைது

ரந்தாவ் பஞ்சாங்:

சுமார் 10,000 ரிங்கிட் மதிப்புள்ள பல்வேறு வகையான பழங்களை கடத்தியதற்காக தாய்லாந்து நாட்டுப் பெண் ஒருவர் நேற்று பொது நடவடிக்கைப் படையினரால் (GOF) கைது செய்யப்பட்டார்.

43 வயதான குறித்த பெண் காரில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, ​​கம்போங் குவால் பெரியோக்கில் GOF பணியாளர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார் என்று, GOF தென்கிழக்கு படைப்பிரிவின் தளபதி டத்தோ நிக் ரோஸ் அஸான் நிக் அப்துல் ஹமிட் கூறினார்.

அந்தப் பெண் அங்குள்ள ஒரு சட்டவிரோத படகுத்துறையிலிருந்து பழங்களை வாங்கிக்கொண்டு வந்ததாகவும், அவர் உள்ளூர் வாடிக்கையாளர்களுக்கு பழங்களை விநியோகிப்பதற்காகச் சென்று கொண்டிருந்தார்,” என்று அவர் மேலும் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here