டணிஸ்தா சுரேஸ்
கோலாலம்பூர்,
சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரும் பின்னரும் என நான்கு நாட்களுக்கு நாடு முழுவதும் சாலைகளில் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்திருக்கிறது.
அதே சமயத்தில் இந்த நான்கு தினங்களிலும் வேகக் கட்டுப்பாடும் குறைக்கப்படும் இங்கு வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் அமைச்சு நினைவுருத்தியது.
பெருநாளுக்கு முன்பாக ஜனவரி 27, 28 ஆகிய தேதிகளிலும் கொண்டாட்டத்திற்கு பின் பிப்ரவரி 1, 2 ஆகிய தேதிகளிலும் இத்தடை அமலில் இருக்கும்.
தேசிய வேகக் கட்டுப்பாட்டு அளவும் குறைக்கப்படும். சாலை விபத்துகளை குறைக்கும் நோக்கத்தில் போக்குவரத்து அமைச்சு இந்நடவடிக்கையை முன்னெடுத்திருக்கிறது.
அரச மலேசிய போலீஸ் படையின் ஓப் செலாமாட் Op Selamat திட்டத்தின் ஓர் அங்கமாக இந்நடவடிக்கைகள் உள்ளன என்று அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

