கோலாலம்பூர்:
நேற்று ஜாலான் அலோர், புக்கிட் பிந்தாங் ஆகிய இடங்களில் கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை (JIM) நடத்திய சோதனை நடவடிக்கையின் போது 176 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோலாலம்பூர் நகராண்மை கழகத்தின் (DBKL) ஒத்துழைப்புடன் நேற்று இரவு 7.15 மணிக்கு தொடங்கிய இந்த நடவடிக்கை, பொதுமக்களின் புகார்கள் மற்றும் விசாரணைகளைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டதாக கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை இயக்குநர் வான் முகமட் சௌபி வான் யூசோஃப் கூறினார்.
கைது செய்யப்பட்டவர்களில் 71 வங்களாதேசிகள், 60 மியன்மார்காரர்கள், 24 இந்தோனேசியர்கள், 16 நேபாளிகள், 3 பாகிஸ்தானியர்கள் மற்றும் எகிப்து, சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவரும் அடங்குவர்.
“இந்த வழக்கு குடிநுழைவு சட்டம் 1959/63 இன் பிரிவு 6(1)(c) மற்றும் பிரிவு 15(1)(c) மற்றும் குடிநுழைவு விதிமுறைகள் 1963 இன் விதி 39(b) ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்படுகிறது.
“கைது செய்யப்பட்ட அனைவரும் மேலதிக நடவடிக்கைகளுக்காக கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.