மலாக்கா:
புத்ராஜெயாவில் உள்ள பிரதமர் அலுவலத்தில் பிரதமர் சந்திப்பு அறையில் நடைபெற்ற 145ஆவது முதல்வர்கள், மந்திரி பெசார்கள் சந்திப்பில் மலாக்கா மாநில முதலமைச்சர் டத்தோஸ்ரீ உத்தாமா அப்துல் ரவூப் யூசோ மலாக்காவில் 618 கிராமங்களை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தை சமர்ப்பித்தார்.
நாட்டின் முதல் முன்னோடித் திட்டமாக இதனைச் செயல்படுத்த உள்ளதாக அவர் கூறினார். இந்தத் திட்டம் கிராம மக்களிடையே சமூகப். பொருளாதார, தொழில்நுட்ப முன்னேற்றத்தை அதிகரிக்கும் குறிக்கோளுக்கு ஏற்ப ஒரு முற்போக்கான படியாக பார்க்கப்படுகிறது.
மலாக்கா மாநில அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதன் மூலம், இந்த முயற்சியை மற்ற மாநிலங்களின் சிறந்த முன்மாதிரியாகவும் வழிகாட்டியாகவும் பயன்படுத்த முடியும் என்று நம்புகிறேன். இந்த திட்டம் மலேசியாவில் உள்ள 28,303 கிராமங்களுக்கு வழிகாட்டியாக இருக்க முடியும், இதனால் ஒவ்வொரு கிராம முகவரியும் மிகவும் சீரானதாகவும் கட்டமைக்கப் பட்டதாகவும் இருக்கும் என்று முதலமைச்சர் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.
முன்னதாக கூட்டத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமை தாங்கினார். துணைப்பிரதமர்கள் டத்தோஸ்ரீர் டாக்டர் அமாட் ஸாஹிட் ஹமிடி, டத்தோஸ்ரீ ஃபடிலா யூசோப் கலந்துகொண்டனர்.