கோலாலம்பூர்:
ஜாலான் டத்தரான் செராஸ் 6, டத்தரான் பெர்னியாக்கான் செராஸில் நேற்று இரவு ஒரு பட்டாசு கடை தீப்பிடித்து எரிந்ததில் ஐந்து வாகனங்கள் எரிந்து நாசமாயின.
சம்பவம் குறித்து இரவு 9.53 மணிக்கு துறைக்கு அழைப்பு வந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (ஜேபிபிஎம்) உதவி செயல்பாட்டு இயக்குநர் அமாட் முக்லிஸ் முக்தார் இரவு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் சொன்னார்.
தகவல் கிடைத்ததும், பண்டார் துன் ஹுசைன் ஒன் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து 13 பணியாளர்கள் மற்றும் மூன்று தீயணைப்பு இயந்திரங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக அவர் கூறினார்.
“பட்டாசுக் கடை முழுவதுமாக தீயில் மூழ்கிய அதேநேரம், அங்கிருந்த Toyota Vellfire, Perodua Bezza, Proton Saga மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் உட்பட ஐந்து வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாயின.
அதிர்ஷ்டவசமாக எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும், தீக்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது,” என்றும் அவர் மேலும் கூறினார்.