ராஷ்மிகா மந்தனா நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘சாவா’ இந்திப் படம் ரூ.100 கோடி வசூலைக் கடந்து வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது.
கடந்த 2003ஆம் ஆண்டு இந்தியில் இவர் நடித்த ‘அனிமல்’ திரைப்படம் ரூ.900 கோடி வசூல் கண்டது. 2024ஆம் ஆண்டு வெளிவந்த ‘புஷ்பா-2’ படம் ரூ.1,200 கோடி வசூலித்து சாதனை புரிந்தது.
இந்நிலையில், இந்த ஆண்டு ராஷ்மிகா நடிப்பில் வெளியான முதல் படமான ‘சாவா’வின் வசூல் மூன்று நாள்களில் ரூ.100 கோடியைக் கடந்துள்ளது.
இதேபோல் ராஷ்மிகா தற்போது நடித்து வரும் ‘குபேரா’ (தெலுங்கு, தமிழ்), ‘சிக்கந்தர்’ (இந்தி) ஆகிய படங்களும் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்த ஆண்டு தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் வெற்றிப் படங்களில் நடித்த ‘ராசியான நடிகை’ என்ற பெயர் தனக்குக் கிடைக்கும் என நம்புகிறாராம் ராஷ்மிகா.