2024, அக்டோபர் 14 ஆம் தேதி ASEAN தலைமைத்துவம், அதன் தொடர்பான உச்சநிலை மாநாடு களின் பட்டியலை லாவோஸ் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் ஒப்படைத்து. அந்த கட்டியக்கோலை ஏற்றுக்கொண்ட மலேசியா, தென் கிழக்கு ஆசிய நாடுகள் சங்கத்தை (ASEAN) இன்னும் உத்வேகத்துடன் முன்னோக்கி கொண்டு செல்லும் என்பது நிதர்சனம்.
மலேசியா ஏற்கெனவே 1985, 1995, 2005, 2015 ஆம் ஆண்டுகளில் ASEAN தலைமைத்துவத்தை ஏற்றுள்ளது. 1985, 1995 தலைமைத்துவம் கோலாலம்பூரி லும் 2005, 2015 தலைமைத்துவம் புத்ராஜெயாவிலும் தலைமையகம் அமைத்து வெற்றிகரமாக பொறுப்பை நிறைவேற்றியது.
2005, 2015 ASEAN தலைமைத்துவத்தை மலேசியா ஏற்றிருந்த போது, அன்வார் பிரதான அரசியல் களத்தில் இருந்து தள்ளி வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு பின்னர் 2025 இல் களம் முற்றாக மாறி இருக்கிறது. அன்வார் மலேசியாவின் பத்தாவது பிரதமராக பொறுப்பேற்றிருக் கும் இத்தருணத்தில் ஆசியான் தலைமைத்துவம் மலேசியாவிடம் ஒப்படைக் கப்பட்டிருக்கிறது. அன்வாரின் தலைமைத்துவத்தின் மீது அதீத நம்பிக்கை கொண்டுள்ள ASEAN நாடுகள் உட்பட உலக நாடுகளும் உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருக்கின்றன.
ASEAN அமைப்பைபொறுத்தவரை எந்த ஒரு முடிவும் ஒருமித்த இணக்க மாகத்தான் இருக்கும். இதனால் இந்த அமைப்பு மெதுவாகத்தான் நகர்கிறது.
இந்நிலை மாறி புதிய உத்வேகத்துடன், எழுச்சியுடன் ஆசியான் துரிதப் பாதை யில் பயணிப்பதற்கான திட்டங்களை அன்வாரின் முன்னெடுப்புகள் அமையும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்று மலேசிய அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழக ஆசியான் ஆய்வுகள் துறை பேராசிரியர் பார் கிம் பெங் குறிப்பிட்டார்.
மக்களை மையப்படுத்தும் வலிமை மிக்க ஒரு முன்னிலை அமைப்பாக ASEANக்கு அன்வார் ஒரு புதிய அடையாளத்தை முத்திரையாக பதிக்க வேண்டும். அதே சமயத்தில் 2010, 2015 ஆசியான் பெருந்திட்டத்தில் ASEAN கவனம் செலுத்துவதை அன்வார் உறுதி செய்ய வேண்டும்.
ASEAN சாசனம் லாவோஸ் தலைநகரம் ஹனோயிலும் ASEAN நடவடிக்கை பெருந் திட்டம் புத்ராஜெயாவிலும் ஒப்புக்கொள்ளப்பட்டவையாகும். இந்த ஒப்பந்தங்களின் வழி தென் கிழக்கு ஆசியாவை சேர்ந்த அனைத்து அமைச்சுக ளும் ஒன்றை ஒன்று தெரிந்துக்கொண்டு பாடுபடுவதற்கு வகைசெய்யப்பட்டிருக் கிறது. இது நாட்டுக்கு நாடு இடையிலான ஆக்கப்பூர்வமான தொடர்பு பாலமாகவும் விளங்குகிறது.
ASEAN இப்போது 70 கோடி மக்கள் தொகையை கொண்டிருக்கிறது. 2035 ஆம் ஆண்டுக்குள் மக்கள் தொகை 100 கோடியாக அதிகரிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த இரண்டு ஒப்பந்தங்களின் வழி மனித சமூக நலன், பாதுகாப்பு போன்றவை நேரடிப் பலன்களை பெற வேண்டும். இதில் தொய்வு இருக்கக் கூடாது. இடைவெளியும் ஏற்படக்கூடாது. மியான்மாரில் நடப்பது போன்று வேறு எந்த ASEAN நாடுகளிலும் நடக்கக் கூடாது.
2035 ஆம் ஆண்டுக்குள் ஆசியான் நாடுகளின் தொழிலாளர்கள் உயர் சம்பளம் பெறுபவர்களாக இருக்க வேண்டும். மேலும் 2035 ஆம் ஆண்டுக்குள் ஒரு புதிய உருமாற்றம் பெற்ற அமைப்பாக ஆசியான் உருவாக வேண்டும்.
இதற்கு அன்வாரின் சீரிய தலைமைத்துவம் இந்த மாற்றங்களுக்கு வித்திடும் என்பது நம்பிக்கையாகவும் எதிர்பார்ப்பாகவும் இருக்குறது.
செயற்கை நுண்ணறிவு, ஆட்டோமேஷன், அல்கோரிஸம், ஆக்மெண்டட் ரியலிட்டி ஆகியவற்றில் அபரிமிதமான முன்னேற்றம் கண்ட நாடுகளாக ஆசியான் திகழ வேண்டும்.
இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் நிறைவேற்றக் கூடிய ஒரு வல்லமை மிக்க தலைவராக அன்வார் இருப்பார் என்பதில் இரு வேறு கருத்துகள் இருக்க முடியாது. ASEAN தலைமைத்துவ பொறுப்பை மலேசியா 2035 ஆம் ஆண்டில் மீண்டும் ஏற்க இருக்கிறது. இந்த முறை மலேசியா பதிவு செய்யவிருக்கும் சாதனைகள் 2035 ஆம் ஆண்டு தலைமை ஏற்புக்கு ஏற்றம் மிகு பாதையை அமைத்திடும்.
2027 இல் அன்வாரின் ஐந்தாண்டுகள் பதவிக் காலம் ஒரு நிறைவை எட்டுகிறது. அதே சமயம் ஒரு வர்த்தக நாடு என்ற முறையில் மலேசியாவின் பொருளாதார நிலையை சார்ந்திருக்கும் 12 ஆவது மலேசியத் திட்டமும் 2025 இல் நிறைவு பெறுகிறது.
இவற்றை எல்லாம் கடந்து அன்வார் அவருக்கு எதிரான குறைகூறல்களை முறியடித்து சீரிய தலைமைத்துவத்தின் வெற்றிகளை பதிவு செய்வார் என்பது திண்ணம்.
2025, ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற உள்ள ASEAN – வளைகுடா ஒத்துழைப்பு மன்றத்தின் உச்சநிலை மாநாட்டில் பேசிய இருக்கும் முதலாவது ASEAN தலைவர்களில் அன்வாரும் ஒருவர்.
2025 ஜனவரியில் டாவோஸ் பொருளாதார கருத்தரங்கில் பேசிய அன்வார், Asean Plus 3 அமைப்பு மேலும் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். Asean Plus 3 அமைப்பில் இடம்பெற்றிருக்கும் சீனா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு நாடும் ஓர் உன்னத மதிப்பு நிலையை கொண்டிருக்கின்றன. ASEAN நாடுகளுடன் மிக நெருக்கமாக இருப்பவை. வியூக பங்காளிகளாகவும் இருக்கின்றன.
2025 ஏப்ரல் அல்லது ASEAN GCC (வளைகுடா ஒத்துழைப்பு மன்றம்) உச்சநிலை மாநாடு நடைபெறும். அதில் G 20 உறுப்பினர்கள் பார்வையாளர்களாக பங்கேற்பதற்கும் மலேசியா அனுமதி வழங்கி இருக்கிறது.
மலேசியாவில் உள்ள அனைத்து அமைச்சகங்களும் சிந்தனை களங்களும் புத்ராஜெயாவுடனும் மணிலாவுடனும் சிங்கப்பூருடனும் மிக அணுக்கமாக செயலாற்றி கொண்டிருக்கின்றன. ஆசியான் தலைமையை பிலிப்பைன்ஸ் 2026 ஆம் ஆண்டிலும் சிங்கப்பூர் 2027 ஆண்டிலும் ஏற்க உள்ளன.
அதேசமயம் 2025 மே மாதம் நடைபெறும் ஒசாக்கா கண்காட்சியிலும் சிறப்பு கவனம் செலுத்தப்படும். இக்கண்காட்சியில் ஆகக் கடைசியான தொழில் நுட்பங்கள் காட்சிக்கு வைக்கப்படும்.
சீனா, தென் கொரியா, ஆசியான் நாடுகள், வளைகுடா ஒத்துழைப்பு மன்ற நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, ஐநா பங்கேற்க உள்ளன. இதில் ASEAN நாடுகள் மிகப்பெரிய பலன்களை அடைவதற்கு அன்வார் ஆக்கப் பூர்வமான திட்டங்களை வகுத்திருக்கிறார்.
மேலும் 2025 அக்டோபர் மத்தியில் நடைபெற இருக்கும் கிழக்கு ஆசிய உச்சநிலை மாநாட்டின் முக்கியத்துவம் குறித்தும் அன்வார் பேசி இருக்கிறார். இதுவே ஆசியான் மலேசிய தலைமைத்துவத்தின் நிறைவை குறிக்கும் இறுதி நிகழ்ச்சியாக இருக்கும்.
இதனிடையே பிரேஸில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் இடம் பெற்றிருக்கும் பிரிக்ஸ் (BRICS) அமைப்புடன் அணுக்கமாக இணைந்து பணியாற்றுவதின் அவசியம் குறித்து 2025 ஜனவரியில் லண்டன் டயணத்தின் போது பிரிட்டிஷ் பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மெருக்கு அன்வார் விளக்கம் அளித்திருக்கிறார் என்று பேராசிரியர் பார் கிம் பெங் குறிப்பிட்டுள்ளார்.