பொக்கோக் சேனா, ஜாபியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் செவ்வாய்க்கிழமை மதியம் 12.05 மணிக்கு ஊழியர்களுக்கும் தொழிற்சாலை மேலாளர்களுக்கும் இடையே கருத்து வேறுபாட்டால் கலவரம் மூண்டது.
போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சம்பளம் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து தொழிற்சாலை ஊழியர்கள் அதிருப்தியடைந்ததிலிருந்து இந்த மோதல் உருவானது என்பது கண்டறியப்பட்டது.
இந்த சம்பவத்தில் மூவருக்கு காயங்கள் ஏற்பட்டதாக போலீஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தது.
மேலும் சம்பவம் குறித்து பொது மக்கள் யாரும் தவறான ஊகங்களை வெளியிட வேண்டாம் எனவும் போலீசார் கேட்டுக்கொண்டனர். இந்த சம்பவம் குறித்த காணொலி வைரலாகி வருகிறது.