GINA & MAT GOT TALENT – GM KLANG ஹரி ராயா கொண்டாட்டத்தில் மேடை ஏறும் சின்னஞ் சிறுசுகள்

கிள்ளான், ஏப்.14 –
ஹரி ராயா கொண்டாட்டம் என்பது வெறும் அறுசுவை உணவு வகைகளை வழங்கும் ஒரு பெருநாள் மட்டும் அல்ல, அதற்கும் மேலாக நேசிப்பவர்களுடன் மகிழ்ச்சிகரமான தருணத்தை உருவாக்குவதாகும்.

GM KLANG மொத்த வியாபார நகரம் Rancak Rioooh Raya 2025 பிரச்சாரத்தின் வழி விழாக் கால கொண்டாட்ட மகிழ்ச்சியை கொண்டு வருகிறது.

சிறு பிள்ளைகளுக்கான ஒரு சிறப்பு திறன் படைப்பை மேடை ஏற்றுகிறது. “Gina & Mat Got Talent – Raya Edition” எனும் அந்நிகழ்ச்சி 19 ஏப்ரல் 2025, சனிக்கிழமை நடைபெறுகிறது.

ஸ்மார்ட் ரீடர் கிட்ஸ் (Smart Reader Kids) நிறுவனத்துடன் இணைந்து 4 முதல் 6 வயது வரையிலான பிள்ளைகளுக்கு அர்த்தங்கள் நிறைந்த மேடையை அமைத்து தருகிறது. ஹரி ராயா கருப்பொருளில் பாட்டுப் பாடி, நடனமாடி, கதை சொல்லி சின்னஞ் சிறுசுகள் தங்களது திறமைகளை, ஆற்றலை காட்டலாம்.

பிள்ளைகளின் ஆற்றலை, திறன்களை அரங்கேற்றும் மேடை என்பதையும் தாண்டி நம்பிக்கையையும் தைரியத்தையும் ஊக்குவிக்கும் ஒரு மேடையாகவே அது விளங்கும். ஷாப்பிங்கிற்கும் மனமகிழ்ச்சிக்கும் குடும்ப நட்புறவானது GM Klang என்பதை இந்த நிகழ்ச்சி மறு உறுதிபடுத்துகிறது.

“எங்களுடைய அனைத்து வருகையாளர்களுக்கும் குறிப்பாக குடும்பங்களுக்கு என்றும் மனதில் பசுமையாக பதிந்திருக்கும் நினைவுகளை உருவாக்குவதில் நாங்கள் அதீத கவனம் செலுத்தி வருகிறோம். அதன் அடிப்படையில் பல்வகையான பொருட்களை தொடர்ந்து மொத்த வியாபாரத்திற்கு வழங்கி வருகிறோம்.”

“ஒவ்வொரு வருகையும் குறிப்பாக சிறார்களுக்கு மிகச் சிறப்பானதாக இருக்க வேண்டும் என்பது தான் எங்களது இலக்கு. பொம்மைகள், ஃபேஷன், அவற்றுக்கு உரிய பொருட்கள் போன்ற சிறார்களுக்கான பல்வகையான அம்சங்களுக்கு GM Klang மிக நீண்ட காலமாகவே பிரபலமாக திகழ்ந்து வருகிறது” என்று GM Klang பிராண்ட் கொம்யுனிகேஷன்ஸ் சீனியர் நிர்வாகி புவான் நோர்சுஹைடா ஓஸ்மான் கூறினார்.

இக்கொண்டாட்டத்தில் இன்னும் நிறைய ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. மனம் கவர்ந்த Gina & Mat மாஸ்கோட்களை நேரில் சந்தித்து உரையாடி மகிழும் வாய்ப்பையும் வருகையாளர்கள் பெறுவர். Samping Sprint, Sauh Kuih போன்ற களிப்பூட்டும் விளையாட்டுகளிலும் பங்கேற்கலாம். கெத்துபாட் பிண்ணுதலிலும் திறமையை காட்டலாம்.”

“இமான் டார்விசி, அமாட் டயான் போன்ற அழகு சிறார் நட்சத்திரங்களின் சிறப்பு மேடை படைப்பு உற்சாகம் தரும். ஹரி ராயா கொண்டாட்டத்திற்கு கூடுதல் மகிழ்ச்சியை அள்ளிக் குவிக்கும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

GM Klang இல் எங்களுடன் இணைந்து ஹரிராயா மகிழ்ச்சியை கொண்டாட வாருங்கள். உங்கள் மொத்த குடும்பத்தையும் மறவாமல் உடன் அழைத்து வாருங்கள். களிப்பில் கலந்துகொள்ளுங்கள். மறக்க முடியாத அனுபவங்களை உங்கள் இதயங்களில் சுமந்து செல்லுங்கள். சின்னஞ் சிறுசுகளின் மகிழ்ச்சியை பார்த்து மகிழ்வோம். ரம்மியமான சூழலை முழுமையாக அனுபவிப்போம்.”

“ஆச்சரியங்கள் நிறைந்த நிகழ்ச்சிகள் அனைவரையும் மகிழ்விக்கும். அற்புதமான பரிசுகள் உங்களுக்காக காத்திருக்கின்றன. கொண்டாட்டங்களை
நேரில் கண்டு களிக்கும் வாய்ப்பை தவறவிட்டுவிடாதீர்கள்” என்று நோர்சுஹைடா அழைக்கிறார்.

ஆகக் கடைசியான மேலும் மேலதிக தகவல்களுக்கு GM Klang அதிகாரப்பூர்வ வலைத்தளம் அல்லது ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை வலம் வரலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here