PKR துணைத் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார் ரஃபிஸி

கோலாலம்பூர்:

PKR கட்சியின் ஆன்லைன் தேர்தல் நடைமுறையின்படி, இன்று வெள்ளிக்கிழமை (மே 9) PKR கட்சியின் நடப்புத் துணைத் தலைவர் பதவியைப் தற்காத்துக்கொள்ள டத்தோஸ்ரீ ரஃபிஸி ரம்லி அதிகாரப்பூர்வமாக தனது வேட்புமனுவை சமர்ப்பித்துள்ளார்.

தற்போது PKR துணைத் தலைவர் பதவிக்கு நூருல் இஸ்ஸா அன்வாரும் விண்ணப்பித்துள்ளார்.

இம்முறை PKR துணைத் தலைவர் பதவிக்கான போட்டி கடுமையாக இருக்கலாம் என்று பரவலாக ஊகிக்கப்படம் நிலையில், முன்னாள் கட்சி பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ சைஃபுதீன் நசுதியோன் இஸ்மாயில், இன்னும் தனது வேட்புமனுவை தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here