ஸ்பா நடத்துனர் மீது ஆசிட் வீச்சு: சந்தேக நபரின் கைரேகைகள் கண்டுபிடிப்பு – போலீஸ்

பச்சோக்:

பெரிஸ் குபூர் பெசாரில், நேற்று இரவு ஒரு ஸ்பா நடத்துனர் மீது ஆசிட் வீசிய வழக்குடன் தொடர்புடைய சந்தேக நபருடையது என நம்பப்படும் நான்கு கைரேகைகளை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

27 வயதான பாதிக்கப்பட்டவருக்குச் சொந்தமான ஸ்பாவின் வளாகத்தில் இருந்து கைரேகைகள் மீட்கப்பட்டதாக மாவட்ட காவல்துறைத் தலைவர் கண்காணிப்பாளர் முகமது இஸ்மாயில் ஜமாலுதீன் தெரிவித்தார்.

மேலும் அரிக்கும் பொருளை (ஆசிட்) வைத்திருக்கப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் ஒரு கொள்கலனையும் அதிகாரிகள் கண்டுபிடித்ததாக அவர் கூறினார்.

“பாதிக்கப்பட்ட பெண் தனது வணிக வளாகத்தில் ஒரு நபருடன் மசாஜ் செய்வதற்கு ஏற்பாடு செய்ததாக தெரிவித்தார். அப்பெண் கதவைத் திறந்ததும், சந்தேக நபர் ஆசிட் என்று நம்பப்படும் ஒரு திரவத்தை குறித்த பெண்ணின் மீது தெளித்தார், பின் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றார் ,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

ஆபத்தான ஆயுதங்கள் அல்லது வழிமுறைகளைப் பயன்படுத்தி கடுமையான காயத்தை ஏற்படுத்துவது தொடர்பான குற்றவியல் சட்டத்தின் பிரிவு 326 இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.

சந்தேக நபரைக் கண்டுபிடிக்க போலீசார் தொடர்ந்து முயற்சித்து வருவதாக இஸ்மாயில் மேலும் கூறினார்.

முன்னதாக, நேற்று இரவு 7.20 மணியளவில் தனது சலூனில் தனியாக இருந்தபோது, ​​ஆசிட் என்று நம்பப்படும் ஒரு பொருளை அவர் மீது ஊற்றியதில் ஒரு ஸ்பா உரிமையாளரின் கைகள் மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here