PPR வீடுகளில் வாடகை பாக்கி RM70 மில்லியனை எட்டியது; வீடுகளை விற்பனை செய்ய DBKL பரிசீலனை

கோலாலம்பூர்:

கோலாலம்பூர் நகராண்மை கழகத்தின் (DBKL) கீழ் உள்ள மக்கள் வீட்டுவசதி திட்டம் (PPR) மற்றும் பொது வீட்டுவசதி (PA) ஆகியவற்றிற்கான செலுத்தப்படாத மொத்த வாடகை RM70 மில்லியனை எட்டியுள்ளது என்று மேயர் டத்தோஸ்ரீ மைமுனா முகமட் ஷெரிப் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் DBKL இன் மேற்பார்வையின் கீழ் உள்ள பகுதிகளில் உள்ள வீடுகளின் பராமரிப்பு மற்றும் நிர்வாகத்தை தொடர்ந்து நடத்துவதற்கு செலுத்தப்படாத நிலுவைகள் பாதிப்பதாக அவர் கூறினார்.

உதாரணமாக நீர் விநியோகத்தை துண்டித்தல், அறிவிப்புகளை வழங்குதல், மற்றும் குத்தகைதாரர்களுக்கு தவணை செலுத்தும் திட்டத்தை வழங்குதல் போன்ற சலுகைகள் வழங்குவது உட்பட, இந்த நிலுவைத் தொகையை சமாளிக்க DBKL பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக மைமுனா சொன்னார்.

“வசூலிக்கப்பட்ட வாடகையைக் கொண்டு குடியிருப்பாளர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்க இந்த முயற்சி மிகவும் முக்கியமானது,” என்று நேற்று நடந்த பாதுகாப்பான நகர சமூக நல்வாழ்வு திட்டத்தில் அவர் கூறினார்.

மேலும், PPR மற்றும் PA வீடுகளை வாங்கக்கூடிய குத்தகைதாரர்களுக்கு அவற்றை விற்பனை செய்வதற்கு DBKL பரிசீலித்து வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here