6ஆம் வகுப்பு மாணவன் துன்புறுத்தல் தொடர்பில் தம்பதி கைது

பினாங்கில் ஒரு தம்பதி,  ஆறாம் வகுப்பு மாணவனான தங்கள் மகனை துன்புறுத்தியதாகக் கூறப்படும் வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுவனின் ஆசிரியரால் முதுகில் காயங்கள்  சிராய்ப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. நேற்று பள்ளியில் இருந்தபோது சிறுவன் வலியால் துடித்ததை அடுத்து, ஆசிரியர் சிறுவனின் உடலைப் பரிசோதித்ததாக பாராட் டயா காவல்துறைத் தலைவர் சசாலி ஆடம் தெரிவித்தார். ஆசிரியர் தெரிவித்ததை அடுத்து பள்ளியின் முதல்வர் போலீசில் புகார் அளித்தார்.

இரண்டு வெவ்வேறு தொழிற்சாலைகளில் மேலாளராகவும் பொறியாளராகவும் பணிபுரியும் 49 மற்றும் 47 வயதுடைய பெற்றோரை போலீசார் கைது செய்ததாக சசாலி கூறினார். சிறுவன் தனது அலமாரியில் உணவை வைத்ததற்காக முதுகில் பிரம்படி அடிக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்ததாக ஹரியான் மெட்ரோ செய்தி வெளியிட்டுள்ளது.

சுங்கை ஆராவில் உள்ள அவர்களின் அடுக்குமாடி குடியிருப்புப் பிரிவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. பாதிக்கப்பட்டவரை அடிக்கப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் ஒரு பிரம்பினை போலீசார் கைப்பற்றினர். தம்பதியினரின் இரண்டாவது குழந்தையான சிறுவன், தனது பெற்றோரால் தொடர்ந்து அடிக்கப்பட்டதாகவும், சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாய் கூண்டில் அடைக்கப்பட்டதாகவும் கூறியதாக சசாலி கூறினார். சிறுவன் பினாங்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here