பினாங்கு:
பினாங்கில் குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்துள்ளதாகப் பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் லிம் சீவ் ஹிம் தெரிவித்தார்.
இந்த ஆண்டு பினாங்கில் 201 குழந்தைகள் வன்கொடுமை புகார்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், இந்த எண்ணிக்கை கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் தற்போது வரையில் மொத்தம் 4,080 குழந்தைகள் வன்கொடுமை புகார்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக் பினாங்கு மாநிலச் சமூகநல மேம்பாடு நலத்துறை ஆட்சிக் குழு உறுப்பினரான அவர் தெரிவித்தார்.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரையில் 113 சிறுமிகளும் 88 சிறுவன்களும் குழந்தைகள் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இதில் பாலியல் வன்கொடுமைகளும் உள்ளடக்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
























