கோலாலம்பூர் :
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பயிலும் மலேசிய மாணவர்களின் விசா நிலைக்கு எந்த இடையூறும் இல்லாமல் அவர்கள் தங்கள் கற்கைநெறிகளைத் தொடரலாம் என்று உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஹார்வர்ட் பல்கலைக்கழத்தில் கல்வி பயில வெளிநாட்டு மாணவர்களுக்கு இடைக்கால தடையை அமெரிக்க அதிபர் டிரம்ப் அமல்படுத்தியுள்ளார்.
இருப்பினும் ஹார்வார்ட் பல்கலைக்கழகம் தாக்கல் செய்த தற்காலிக தடை உத்தரவை நிறுத்தும் மேன்முறையீட்டை அந்நாட்டு கூட்டாட்சி நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
எனவே ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கும் சுமார் 6,800 வெளிநாட்டு மாணவர்கள் தற்காலிகமாக நிம்மதி பெருமூச்சு விடமுடியும்.
இந்த நிலையில், மலேசிய மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு, கல்வியமைச்சு, அங்குள்ள நிலவரங்களை மலேசியா வாஷிங்டன் டி.சி. அலுவலகம் மூலம் இந்தப் பிரச்சினையின் வளர்ச்சியை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.
இந்த முடிவு மலேசிய மாணவர்கள் உட்பட சர்வதேச மாணவர்கள், தற்போதைக்கு தங்கள் விசா நிலைக்கு எந்த இடையூறும் இல்லாமல் தங்கள் படிப்பைத் தொடர அனுமதிக்கிறது என்று உயர் கல்வியமைச்சு கூறியது.